ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கடலூர் சில்வர் பீச்சில் தூய்மைப்பணி கலெக்டர் துவக்கி வைத்தார்

கடலூர் : 

                  சர்வதேச கடலோர தூய்மை தினத் தையொட்டி கடலூர் சில்வர் பீச் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியினை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

               சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி கடலூர் சில்வர் பீச் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் பணியை துவக்கி வைத்தார். கடலோர தூய்மை தினத்தையொட்டி கடலூர் சில்வர் கடற்கரையை நகராட்சி துப்புரவு பணியாளர்கள், பெரியார் கலைக்கல் லூரி மாணவ மாணவியர்கள், ஆயுதப்படை காவலர்கள் தலா 50 பேர் மற்றும் பொது மக்கள் மூலம் கடற்கரைப் பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டன.

                    தொடர்ந்து, "கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். தின்பண்டங்கள் சாப்பிட்டு குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண் டும். நம் வீட்டை வைத்திருப்பதைப் போல கடற்கரை பகுதியையும் தூய்மையாக பராமரிப்பதால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும். கடலூர் துறைமுகத்திற்கு மீன் கொண்டு வரும் மீனவர்கள் தங்களுக்கு சாலை வசதி, உயர்கோபுர விளக்கு கேட்டுள்ளனர். கோபுர விளக்கு அமைக்க அரசு தடை விதித்துள்ளதால் சோடியம் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் சேகர் பங்கேற்றனர். 

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP