கடலூர் - பிச்சாவரத்திற்கு அரசு பஸ் : அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கினார்
பரங்கிப்பேட்டை :
கடலூரில் இருந்து பிச்சாவரத்திற்கு அரசு பஸ்சை பரங்கிப்பேட்டையில் அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத் தார்.
பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே புதியதாக பாலம் கட்டப்பட்டது. திறப்பு விழாவின் போது அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் களை கடலூருக்கு எடுத் துச் செல்லவும், கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக கடலூரில் இருந்து பிச்சாவரத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனையொட்டி கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் அரசு பஸ்சை பரங்கிப்பேட்டையில் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். விழாவில் கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், சேர்மன் முத்துபெருமாள், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத் தலைவர் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக